கடந்த ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏர்செல் தனது சேவையை நிறுத்தி கொண்டது.
மேலும் தனது நிறுவனம் திவால் நிறுவனமாக அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி ஏர்செல் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் தனது ஊழியர்கள் அனைவருக்கும் இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த இமெயில் நிறுவனத்தின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும், இதன் காரணமாக விரைவில் திவால் நிறுவனமான அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் ஏர்செல் நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.