அப்பல்லோ ஆண்டவா! - அதிமுக தொண்டர்களின் அளப்பறை பிளக்ஸ்

திங்கள், 10 அக்டோபர் 2016 (12:58 IST)
கட்சியின் தலைமைக்கு ஒரு விஷயம் நேர்ந்துவிட்டது என்றால், துடிதுடித்து போகும் தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக என்பதில் எந்த ஐயமும் இல்லை.
 

 
அதற்காக, அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது, மொட்டை அடிப்பது, மண் சோறு சாப்பிடுவது, ஏன் பேருந்தை கொளுத்தவும் கூட தயங்க மாட்டார்கள். ஜெயலலிதா சிறை சென்ற போதும் இதுபோன்று செய்தார்கள்.
 
தற்போது, ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் 19 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி பலரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள்.
 
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ’அப்பல்லோ ஆண்டவா’ என்று பிளக்ஸ் வைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்