அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.! திமுக பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!

Senthil Velan

வியாழன், 4 ஜூலை 2024 (14:54 IST)
சேலத்தில் அ.தி.மு.க பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தி.மு.க நிர்வாகி சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான சண்முகம். சேலம் கொண்டாலம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக்குழு தலைவராகவும் பணியாற்றினார்.
 
இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கொலையாளியை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ALSO READ: திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!
 
இந்நிலையில் தி.மு.க.,வை சேர்ந்த சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகம் தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்