பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தேசவிரோதிகள்: நிர்மலா சீதாராமன்

சனி, 28 ஜனவரி 2017 (15:08 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் நடத்த போராட்டத்தில் தேசிய கொடியை அவமதித்தவர்களும், பாரத பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டவர்களும் தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார். 


 

 
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
 
சென்னை மெரீனாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில தேசவிரோதிகள் ஊடுருவியதால் கலவரம் வெடித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் நடத்த போராட்டத்தில் தேசிய கொடியை அவமதித்தவர்களும், பாரத பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டவர்களும் தேசவிரோதிகள், என்றார்.
 
பொதுமக்கள் ஆளும் ஆட்சிக்கு எதிராக அவர்களது தவறுகளை எடுத்துரைக்க கூடாது. அப்படி செய்தால் அவர்கள் தேசவிரோதிகள் ஆவார்கள். பாஜக அரசு இவ்வாறான கருத்தை தொடர்ந்து கூறி வருகிறது. யார் தேசவிரோதிகள் என்று அவர்களே பட்டியிலிடுகார்கள், அரசை குறை கூறாமல் எப்படி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாஜக அரசு நாட்டு மக்கள் எடுத்துக் கூறவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்