வாக்களித்த பின் என்ன சொல்கிறார்கள் ஸ்டாலின் மற்றும் குஷ்பு

திங்கள், 16 மே 2016 (09:51 IST)
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.


 
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்த ஸ்டாலின், 
 
திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறப்போகிறது. கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலை அடிக்கிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை அடிக்கிறது. என்னை பொறுத்தவரையில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பதுதான் எனது எண்ணம். என்ன ப்ராடு தனம் பண்ணினாலும், என்ன அயோக்கியத்தனம் பண்ணினாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த தேர்தலை பொறுத்தவரையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். 
 
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பூ, தனது கணவர் சுந்தருடன், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பணத்தை கைப்பற்றியுள்ளது. அதில் 99 சதவிகிதம் பணம் அதிமுகவினருடையது என்று தெரிய வந்துள்ளது. அதிமுக பிரமுகர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தோல்வி பயம் வந்ததால், எப்படியாவது பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் யார் தங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று தீர்மானித்து ஜனநாயக முறையில் வாக்களிக்கும் நாள் இது. இதுவரை தமிழகத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை பார்த்து கிடையாது. நிச்சயமாக அதிமுக அரசுக்கு மிகப்பெரிய பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 

வெப்துனியாவைப் படிக்கவும்