நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பதவியேற்பு - கவர்னர் முடிவு?

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:12 IST)
சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பார்த்துக்கொள்ளலாம் என கவர்னர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடந்த 5ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழா இன்று நடைப்பெறும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று நடைப்பெறவில்லை. இதனால் ஆளுநர் சசிகலாவுக்கு பதவியேற்பு செய்ய விரும்பவில்லை என்றும் தகவல்கள் வதந்தியாய் பரவி வருகிறது.

மேலும் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்