அத்தி வரதரை அடுத்து ஜி ஜிங்பிங்: வேற லெவலில் காஞ்சிபுரம் மாவட்டம்

வெள்ளி, 11 அக்டோபர் 2019 (22:55 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அத்தி வரதர் மிகப் பெரிய புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. தமிழகத்திலிருந்து மட்டுமன்றி இந்தியா முழுவதும் இருந்து காஞ்சிபுரத்திற்கு சென்று அத்திவரதரை வழிபட்டனர். இதனால் காஞ்சிபுரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாபாரம் செழித்து ஓங்கியது 
 
மேலும் அத்தி வரதர் என்ற ஒரு விஷயம் இருப்பது இன்றைய தொழில்நுட்ப உலகில் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தென் ஓரத்தில் உள்ள ஒரு நகரில் 40 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு குளத்தில் இருந்து ஒரு சிலையை எடுத்து வழிபட்டு வருகிறார்கள் என்ற செய்தியை சின்ன சின்ன நாடுகளின் மீடியாக்கள் கூட வெளியிட்டனர் 
 
இந்த நிலையில் அத்திவரதரை அடுத்து தற்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையால் மகாபலிபுரம் நகரமும் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. இந்தியா என்றாலே தாஜ்மஹால் என்ற ஒன்று மட்டுமே உலக மக்களுக்கு தெரிந்துகொண்டிருந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் தாஜ்மஹாலை விட பலமடங்கு முக்கியமான பகுதி இருப்பதை தெரிந்து உள்ளனர் 
 
எனவே பல்வேறு நாட்டு மக்கள் இந்தியா வரும்போது நிச்சயம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள் என்பது உறுதியாகிறது. காஞ்சிபுரம் நகரம் இனி சுற்றுலா விஷயத்தில் வேற லெவலுக்கு மாறவுள்ளது என்பது உறுதி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்