ஓ.ராஜா வழக்கில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் கதறல்

திங்கள், 20 ஜூன் 2016 (16:51 IST)
ஓ. ராஜா மீதான வழக்கில் இருந்து விலகுவதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி மோகன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 

 
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து, கடந்த  7.12.2012 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி மோகனை நியமனம் செய்யக்கோரி பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து, மோகனை சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவரும் வழக்கில் ஆஜராகி வாதாடி வந்தார்.
 
இந்த நிலையில், இந்த வழக்கில் காவல்துறை போதுமான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், அரசு சிறப்பு வழக்கறிஞர் பணியில் இருந்து விலகுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்