தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், தீவிர மன அழுத்தத்தில் இருந்த நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது போல் நேற்றைய நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. அதன் பின் அவரை அங்கிருந்து வெளியேற்றி ஒரு தனியார் மருத்துவமனையில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின் அவரை மீண்டும் நிகழ்ச்சியில் பங்கு பெறவைக்க, விஜய் தொலைக்காட்சி அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது எனவும், ஆனால், அதில் விருப்பமில்லாத ஓவியா, கமல்ஹாசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, தனது சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.
மன அழுத்தம் காரணமாக ஓவியா தற்கொலைக்கு முயன்றார் எனக்கூறப்படுகிறது. அப்படியெனில், அதற்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் ஆகிய அனைவரும் காரணம். எனவே, இதுபற்றி போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.