2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும் - செல்லூர் ராஜூ பேச்சால் சிரிப்பலை

திங்கள், 13 மார்ச் 2017 (12:37 IST)
மதுரை அருகே உள்ள அரசு வாணிப கிடங்கிலிருந்து, அந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. 


 

 
நேற்று திடீரென அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார்  மற்றும் கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் அங்கு வந்து ஆய்வு மேற்கண்டனர். அதன்பின் அவர்கள் செய்தியாளர்களின் பேசினர்.
 
அப்போது பேசிய செல்லூர் ராஜூ, ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கிறது. தேவையில்லாமல் எங்கள் ஆட்சியை குறை கூறுகிறார்கள். வருகிற 2011ம் ஆண்டிலும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக்கூறினார். இது கேட்டு நிருபர்கள் மற்றும் சுற்றியிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். உடனே, அவரின் அருகிலிருந்த அமைச்சர் உதயகுமார், 2021 என்று மாற்றிக் கூறும்படி அவரின் காதைக் கடித்தார். அதன்பின் சுதாரித்த செல்லூர் ராஜூ சிரித்துக் கொண்டே 2021ம் ஆண்டு என்றார். 
 
சமீப காலமாக எங்கு சென்றாலும், செல்லூர் ராஜூ ஏதோ குழப்பத்திலேயே பேசி வருவதாக அதிமுக கட்சியினர் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்