ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்அதிமுகவை மறைமுகமாக பாஜக தான் இயக்குகிறது எனவும், இதற்கு தடையாக இருந்த சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடிகளை கொடுத்து தமிழகத்தில் பின்வாசல் வழியாக பாஜகவை கால் ஊன்ற வைக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முயல்கிறது என பல்வேறு கட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
தற்போது மக்களவை துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரைக்கும், ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த எம்பி ஒருவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதனால் தன் கடந்த வாரம் தம்பிதுரையும், மைத்ரேயனும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்ததாக கூறப்படுகிறது.