’மருத்துவமனையில் ஜெயலலிதா’ - மேலும் ஒருவர் தீக்குளிப்பு!

வியாழன், 13 அக்டோபர் 2016 (21:40 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.


 
 
இதற்கிடையே, ஜெயலலிதா நலம்பெற வேண்டி மதுரை அருகே ராஜவேல் என்ற இளைஞரும், சென்னை அடுத்த தாம்பரம் அருகே சற்குணம் என்ற வாலிபரும் தீக்குளித்து இறந்துள்ளனர். 
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கும்பகோணத்தில் அதிமுக பிரமுகர் மோகன்குமார் என்பவர் தீக்குளித்துள்ளார்.  அவரை ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்