இன்று சட்டசபை கூடிய போது, மத்திய அரசு கொண்டு வந்த கால்நடை சந்தை கட்டுப்பாட்டிற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி, பெரும்பான்மையான மக்களின் விருப்பப்பட்டி தமிழக அரசு முடிவெடுக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்வரின் இந்த பதிலை ஏற்காத திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், அதிமுகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.