இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் திமுக இதுவரை இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திமுக சார்பில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.