பேனர் வைப்பதில் சிக்கல்; ரூ.1000 கொடுத்து உயிரை காவு வாங்கிய ஜெயகோபால்!

வியாழன், 19 செப்டம்பர் 2019 (13:04 IST)
அதிமுக பிரமுகர் ஜெயகோபாலன் அந்த சாலையில் பேனர் வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ.1000 லஞ்சம் வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 
 
இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆனால், ஜெயகோபால் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு தற்போது தலைமறைவாக உள்ளார். தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஆம், பேனர் வைப்பதற்காக ஜெயகோபால் மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஆடியோ ஆதாரம் ஒன்றும் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. 
 
மேலும், அந்த இடத்தில் பேனர் வைக்கும்போதே பிரச்சனை ஏற்பட்டதாகவும், ஒப்பந்த ஊழியர்களை மிரட்டியே அங்கு அந்த பேனரை கட்டியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்