அதிமுக பொதுச் செயலாளர் யார்? இன்று தீர்ப்பு!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (07:45 IST)
அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக பொது செயலாளர் என சசிகலா கூறுவது செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக தரப்பில் ஓபிஎஸ் இபிஎஸ் மனு அளித்திருந்தனர் 
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பதும் இரு தரப்பு வாதம் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் அளிக்கப்படயிருப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்