கருணாஸுக்கு ரூ.10 கோடி; கூவத்தூரில் டீல் ; டைம்ஸ் நவ் செய்தி வெளியீடு

திங்கள், 12 ஜூன் 2017 (19:19 IST)
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


 

 
சசிகலா தரப்பிற்கு எதிராக ஓபிஎஸ் களம் இறங்கியதும், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. எனவே, சசிகலா தரப்பு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தது. அவர் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டியிருந்ததால், அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில், 11 பேர் மட்டும் ஓ.பி.எஸ் பக்கம் சென்றனர்.
 
ஓ.பி.எஸ் பக்க மற்றவர்களும் சென்று விடக்கூடாது என கருதிய சசிகலா தரப்பு, எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி, கோடிக்கணக்கில் பணம், தங்க கட்டிகள் மற்றும் கார் ஆகியவற்றை கொடுக்க முன்வந்ததாக அப்போதே செய்திகள் வெளியானது. அதன்பின் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று தற்போது முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார்.


 

 
இந்நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சி ஆகிய இரண்டும் இணைந்து இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுகவை சாராத கருணாஸ், தமீன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு சசிகலா தரப்பு ரூ. 10 கோடி கொடுக்க முன்வந்ததாகவும், மற்ற எம்.எல்.ஏக்களுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.6 கோடி மதிப்புடைய தங்க கட்டிகளை கொடுக்க முன்வந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்