முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மணிகண்டன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.