அரவக்குறிச்சி தொகுதியில் அக்கறை காட்டும் அ.தி.மு.க

ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:37 IST)
தேர்தல் துறையால் நியமிக்கப்பட்ட மாவட்ட முதன்மை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.


 

 
தமிழக அளவில் கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில், அதே அரவக்குறிச்சி தொகுதியில் அரசு சார்பில் தற்போதே அ.தி.மு.க விற்காக வாக்குகள் சேகரிக்கும் பாணியில் அத்தொகுதியில் கரூர் அருகே ரூ 1.32 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைப்பணிகள் மற்றும் திட்டங்களை மக்களவை துணை சபாநாயகர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சியில் பொதுநிதியில் ரூ.12 இலட்சம் மதிப்பில் புதிய சாலைப்பணிகளை நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சியில் பொதுநிதியில் ரூ.120 இலட்சம் மதிப்பில் புதிய சாலைப்பணிகளை முதுநிலை மாவட்ட ஆட்சித்தலைவர் காகர்லா உஷா  தலைமையில், மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பிதுரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
 
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், காருடையாம்பாளையம் ஊராட்சி, பெரும்பாறை வழி வேலப்பகவுண்டனூர் காட்டுவலசு முதல் மாருதி கிரசர் வரை ரூ.20 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியையும்,  பள்ளப்பட்டி பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக நகர்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 100 இலட்சம் மதிப்பில் அதாவது 1 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் ரோடு ஜே.ஜே.நகர் சாலைப்பணியையும் என, ரூ.1 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய சாலைப்பணிகள் மற்றும் புதுப்பித்தல் பணிகளை  நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  
 
இதையடுத்து அதே அரவக்குறிச்சி தொகுதியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியம், அத்திப்பாளையம் மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி மண்மாரியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். 
 
கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சி திட்டநிதியின்கீழ் அத்தப்பாளையம் ஊராட்சி வல்லாங்குளத்துப்பாளையம் ஊராட்சியில் காலணியில் ரூ.7 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தையும், பள்ளப்பட்டி பேரூராட்சியில் மண்மாரியில் ரூ.5 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடை என ரூ.12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களை முதுநிலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.காகர்லா உஷா தலைமையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.அருணா, மாவட்ட ஊராட்சித்தலைவர் (பொ) திரு.பொ.மார்க்கண்டேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.கோமகன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும், அ.தி.மு.க வினரும் கலந்து கொண்டனர்.
 
தேர்தல் நடக்காததாலும், ஏற்கனவே இந்த தொகுதியில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி இருந்ததாலும் மக்களை தற்போதே தேர்தலுக்காக கேன்வாஸ் செய்வதாக நடுநிலையாளர்களும், சமூக நல ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்