அமித்ஷா மகனோடு டீலிங்!.. பென் மீடியாவில் கோடி கோடியாக பணம்!.. ஆதவ் அர்ஜுனா புகார்!...

Mahendran

ஞாயிறு, 12 ஏப்ரல் 2026 (12:25 IST)
என்னதான் பாஜகவை திமுக கடுமையாக விமர்சித்து வந்தாலும் அந்த இரண்டு கட்சிக்கும் இடையேதான் கூட்டு.. திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மறைமுக கூட்டணி என்று தவெக தொடர்ந்து சொல்லி வருகிறது.. குறிப்பாக தவெக தலைவர் விஜய் பேசும் எல்லா மேடைகளிலும் திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்.. இரண்டுக்கும் ஒரே கொள்கைதான்.. இரண்டு பேரும் கள்ளக்கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று பேசி வருகிறார்.

இதே கருத்தை தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் தொடர்ந்து சொல்லி வருகிறார்
. அதிலும் ஜனநாயகன் படத்தை முடக்கியது உதயநிதி ஸ்டாலினும், மத்திய அமைச்சர் வேல்முருகனும்தான்.. நாங்கள் பாஜகவுக்கும், திமுகவுக்கும் எதிரி.. அதனால்தான் கூட்டு சேர்ந்து இந்த வேலைகளை செய்கிறார்கள்.. ஆனால் வெளியே எதிரி போல நடித்து வருகிறார்கள்’ என்று பேசினார்..

அதேபோல், ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது தொடர்பாக கருத்து தெரிவித்த போதும் இதே கருத்தை ஆதவ் அர்ஜுனாதெரிவித்தார். இந்நிலையில்தான், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘அமித்ஷாவின் மகனுடன் சபரீசன் தொழில்முறை உறவு வைத்துள்ளார். 2021ம் வருடம் திமுக வெற்றி பெற்றதும் 2022ம் வருடம் சபரீசன் அமித்ஷாவை சந்தித்தார்.

சபரீசன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பென் நிறுவனத்திற்கு கோடி கோடியாக எங்கிருந்து பணம் வருகிறது?.. இதையெல்லாம் அமலாக்கதுறை ஏன் விசாரிக்கவில்லை?’ என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்