எல்லாமே சூப்பரா இருக்கும்: அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்த நடிகை நமிதா!

வெள்ளி, 26 மார்ச் 2021 (07:11 IST)
வர இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில தொகுதிகள் விஐபி தொகுதிகளாக உள்ளன. அவற்றில் ஒன்று அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தொகுதி ஆகும் 
 
இந்த தொகுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல பிரபலங்கள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை நமீதா இந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியபோது ’இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை டிஜிபியாக இருந்தவர். மக்களின் மனதில் இருந்தவர். சிங்கம் மாதிரியான ஒரு போலீஸ் அதிகாரி நம்முடைய தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் சட்டம்-ஒழுங்கு எல்லாமே பாதுகாப்பாக இருக்கும். எல்லாமே சூப்பராக இருக்கும் 
 
ஒரு சிங்கம் எம்எல்ஏக்கள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். சூப்பராக இருக்கும் அல்லவா? என்று கூறினார். அது மட்டுமல்லாமல் நன்றாக படித்தவர், எல்லா விதிகளும் தெரிந்தவர், நல்ல திறமை உள்ளவர். எனவே அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்’ என்று நமீதா பேசினார் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்