டிவிட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு: தகாத விமர்சனம் காரணமா?

செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:46 IST)
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைத்தளமான டிவிட்டரின் இருந்து வெளியேறியுள்ளார். 
 
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் குஷ்புவும் ஒருவர். தற்போது இவர் டிபிட்டரில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவரிடம் கேட்ட போது டிவிட்டரில் எதிர்மறையான கருத்துக்கள் வருவதால் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் குஷ்புவின் மகளை தவறாக வார்த்தையால் திட்டினார். இதை கண்டு கடுப்பான குஷ்பூ அந்த நபரை மோசமாக திட்டி தீர்த்தார். 
ஒருவேளை இது போன்ற கேலி கிண்டல்கள், விமர்சனங்கள் குஷ்புவை காயப்படுத்தி அவர் டிவிட்டரில் இருந்து வெளியேறினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்