தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கியவர் சிவக்குமார். 70களில் தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடித்தவர் தற்போது நடிப்பை விடுத்து ஓய்வில் இருக்கிறார். நடிப்பை தாண்டி ஓவியம் வரைதல், தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் மீது தீராத காதல் கொண்டவர் சிவக்குமார்.
சமீபத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவக்குமார் “சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், குமரியில் திருவள்ளுவருக்கு சிலையையும் நிறுவிய முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தற்போது உயிரோடு இருந்தால் அவரது பாதத்தை தொட்டு வணங்குவேன்” என நெகிழ்ந்து பேசியுள்ளார்.