ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரிப்பதற்காக நான் டிசம்பர் 4ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். லிஃப்டில் ஏறி மேல் தளத்திற்குஇ சென்றேன். அப்போது அங்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அனைவரும் மௌனமாக நின்று கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு ஒரு சினிமா காட்சி போல் அது இருந்தது. அப்போது, ஒரு அமைச்சரின் உறவினர் என்னிடம் வேகமாக ஓடிவந்து “அண்ண.. ஷூட்டிங் இருந்தால் கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள்” எனக் கூறினார்.
ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த நான், படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனால், மறுநாள் காலை வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, அவர் ஏன் என்னிடம் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை. நடிகர்கள் ஆனந்தராஜ், விந்தியா ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் தைரியம் நிச்சயம் எனக்கில்லை” எனக் கூறினார்.