பரபரப்பான அரசியல் சம்பவங்களுக்கு அடுத்து ஒருவழியாக எடப்பாடி தமிழக முதல்வராக ஆளுநர் அறிவித்தார். மேலும், 15 நாட்களுக்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், உடனாடியாக தனது பலத்தை நிரூபிக்க முடிவெடுத்த எடப்பாடி தரப்பு இன்று கூடம் சட்டபையில் பெரும்பான்மையை நீருபிக்க உள்ளது.
சசிகலா தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை எனத் தெரிகிறது.. எனவேதான், அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் மனசாட்சி படியும், மக்களின் மனநிலை புரிந்தும் வாக்களிக்க வேண்டும் என அவருக்கு எதிரான ஓ.பி.எஸ் அணி கோரிக்கை வைத்துள்ளது.