கபடி வீரர்களுக்கு விபத்து காப்பீடு! – அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் வழங்கினர்!

சனி, 30 செப்டம்பர் 2023 (19:13 IST)
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ராயல் சுந்தரம் பைனான்ஸ் இணைந்து  3000 கபடி விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்பீடு வழங்கிய அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர்


 
மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு தன்னார்வ கபடி கழகம் இணைந்து கபடி வீரர்களுக்காக  தனிப்பட்ட காப்பீடு வழங்கும் நிகழ்வு மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மூர்த்தி பேசுகையில்:

விளையாட்டு வீரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம் பள்ளி கல்லூரி மாணவர்களிடத்தில் போதைப் பழக்கம் தற்போது அதிகமாகி வருவதை திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வர் அதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்ச்சி செய்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழங்குவதற்கு அமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்து வருகிறார். சிறுவயதில் நானும் ஒரு கபடி வீரர் தான் எனக்கு பிடித்த விளையாட்டு கபடி.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர் கூறுகையில்:

கடந்த வாரம் பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற கபடி போட்டியில் கடைசி நிமிடங்கள் வரை 10 புள்ளிகள் பின்னிலையில் இருந்த பாத்திமா கல்லூரி இறுதியாக வெற்றி பெற்றதை கண்டு ரசித்தேன். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் சோலைராஜா ஆண்டுதோறும் கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்