இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினம் ஒரு தகவல் வந்தவாறு உள்ளது. அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ்நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் விரைவில் குணம் பெற வைத்துவிடலாம் என்ற தகவலும் வருகிறது.
அப்பல்லோ வட்டாரத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்த தகவலில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுவதும் குணமடைய இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியாது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றினால், ஓரளவு சீக்கிரம் குணமாக ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் பேசியதாகவும், வெளிநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் அதற்கான சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.