இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரையே வலம் வந்த அபிராமி

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (11:25 IST)
கள்ளக்கதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமி, தனது இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரையே வலம் வந்துள்ளார்.
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் அந்த பெண்மணியையும் அவரது கள்ளக்காதலனான பிரியாணிக்கடை ஊழியர் சுந்தரத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அபிராமி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அபிராமியின் கணவரான விஜய் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வந்தனர். வாடகையை கூட 3 மாதத்திற்கு ஒரு முறை தான் கொடுத்து வந்துள்ளார் விஜய்.
 
ஆனால் மனைவி வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் விஜய் கஷ்டப்பட்டு, ஒரு ஸ்கூட்டியை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வண்டி வந்த பிறகு தான் பிரச்சனையே ஆரம்பித்தது.
வண்டி வந்த பிறகு அபிராமியை கையில் பிடிக்க முடியாத அளவிற்கு போனது. வண்டியை எடுத்துக் கொண்டு அபிராமி குன்றத்தூரையே வலம் வந்துள்ளார். அப்போது தான் பிரியாணிக்கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளக்தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலனோடு ஜாலியாக வாழ பெற்ற குழந்தைகளையே கொன்றுள்ளார் அந்த அரக்கப் பெண்மணி அபிராமி. 
 
இவரையெல்லாம் விசாரணை என்ற பெயரில் உட்கார வைத்திருப்பதை விட, அபிராமிக்கும், அவளது கள்ளக்காதலன் சுந்தரத்திற்கும் உடனடியாக கொடூர தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரியான ஜென்மங்கள் எல்லாம் இனி திருந்துவார்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்