இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமமுக செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பை தினகரன் வெளியிட்டுள்ளார்.
அதில், வருகின்ற ஜூன் 7ஆம் தேதி சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 07.06.2023 புதன்கிழமை அன்று 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற காலை உள்ளது.