மேட்டூர் அணை, பவானி, திருவையாறு, மற்றும் திருவாரூர், நாகை மாவட்டம் உள்பட காவிரி டெல்டா பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு விழாவிற்காக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கும்பகோணம் வரை சென்றது. இதனால் மற்ற பகுதியில் மக்கள் ஆற்றில் பம்பு செட்டுகள் அமைத்தும் கிணறு தோண்டியும் வழிபாடு நடத்தினர்.