பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்

திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:36 IST)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பல்கலைக்கழக விடுதியில் வெளியூர் மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இக்கல்லூரியில் வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார். இன்று காலை மாணவி விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அந்த வாலிபரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த மாணவியை மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
விசாரணையில் அந்த வாலிபர், வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. எதற்காக அந்த வாலிபர் லாவண்யா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்