காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிப் படுகொலை

திங்கள், 2 அக்டோபர் 2023 (18:07 IST)
திருநெல்வேலியில் காதலை ஏற்க மறுத்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுனில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருபவர் 18 வயது இளம்பெண் சந்தியா. இவர், இன்று கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்றபோது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில்  இந்த சம்பவம்  நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்