கண்ணுமுண்ணு தெரியாத காதல்:ஒரு நாள் கூட வாழ முடியாமல் நடந்த பரிதாபம்

சனி, 29 டிசம்பர் 2018 (16:40 IST)
திருச்சியில் காதல் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே ரங்கமுத்து பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அனுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு அனுப்பிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் வீட்டார் வற்புறுத்தியதால் பார்த்திபன் தனது பெற்றோரின் சம்மந்தமில்லாமல் அனுப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இதனையறிந்த பார்த்திபனின் தாயார் விஷம் குடித்துவிட்டதாக பார்த்திபனிடம் பொய்யாக கூறினார். இதனால் அதிர்ந்துபோன பார்த்திபன் காதல் மனைவியை விட்டுவிட்டு தனது தாயிடம் சென்றுவிட்டார். மனமுடைந்த அனுப்பிரியா கணவரிடம் சேர்த்துவைக்குமாறு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
 
மேலும் பார்த்திபனின் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டம் நடத்தினார். அந்த நேரத்தில் அவர் வீட்டில் யாருமில்லை.
 
பெற்றோரை சமாளிப்பதா, இல்லை தன்னை நம்பி வந்த பெண்ணிடம் செல்வதா என்ற குழப்பத்தில் இருந்த பார்த்திபன், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். கணவன் இறந்த துக்கத்தில் இருந்த அனுப்பிரியா தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட கனவுகளுடன் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்ட இவர்களால் சந்தோஷமாய் ஒரு நாளும் வாழ முடியவில்லை. இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்