500 ரூபா தரேன்.... மாணவியின் தாயிடம் அத்துமீறிய ஆசிரியர்!!!

புதன், 27 மார்ச் 2019 (15:09 IST)
சேலத்தில் மகளிடம் அத்துமீறிய ஆசிரியரிடம், ஞயாயம் கேட்க போன தாயிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் தும்பிப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அன்புமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
அன்புனணி மாணவிகளை மிரட்டி அவர்களிடம் அத்துமீறி வந்துள்ளார். இதுகுறித்து 8-ம் வகுப்பு மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது தாயார், பள்ளிக்கு சென்று அன்புமணியிடம் ஞயாயம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ 500 தருகிறேன் வா என அவரது தாயிடமே கூறியுள்ளார். 
 
இதுகுறித்து மாணவியின் தாயார் ஊர் மக்களிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மக்கள், பள்ளி முன்னர் திரண்டுள்ளனர். ஆனால் அப்பொழுதும் திமிர அடங்காத அன்புமணி உங்களால் என்னை ஒன்னும் பண்ண முடியாது எனவும் திமிராக பேசியுள்ளான். இதுகுறித்து ஊர்மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்