இந்த நிலையில், அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது) , அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.
இந்த நிலையில், மத்திய துணை ராணுவ படை வீரர் ஜேம்ஸ் ஆற்றில் குதித்து நீண்ட துரம் வெள்ளத்தில் நீந்தி, சிறுவன் சாபிக்கை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.