பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (13:35 IST)
அடுத்த இந்திய பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக நமது முதல்வர் மு க ஸ்டாலின் இருப்பார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா தெரிவித்தார். 
 
நேற்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேசிய போது  ’நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்பதற்காக ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
17 மாணவர்களை நீட் தேர்வால் இழந்து உள்ள நிலையில்  நீட் தேர்வு ரத்து செய்யாத மோடியும் அமித்ஷாவும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். நீட் தேர்வை ரத்து செய்யக்கூடிய இடத்தில் வேறொரு பிரதமர் இருப்பார் என்றும் அந்த பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவிற்கான விடியலை தமிழக முதலமைச்சராக மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.  மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்பவத்திற்கு மோடியும் அமித்ஷாவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்றும் ஆ ராசா தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்