தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக, கடந்த பல ஆண்டுகளாக அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது. ஆனால் இந்த கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் மறைவு அக்கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் புதியதாக 'வன்னியர் சங்கம்' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இக்கட்சியில் தற்போது பாமகவில் இருக்கும் பலர் இணைவார்கள் என்றும் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்