ஜனநாயக பாதையில் மாபெரும் மைல்கல் - அமைச்சர் உதயநிதி

சனி, 18 நவம்பர் 2023 (14:36 IST)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையை உடனே கூட்டி, அந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது ஜனநாயக பாதையில் மாபெரும் மைல்கல் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். நியமனப்பதவியில் அமரும் பாசிசத்தின் நிழலிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு ஒரு போதும் பின் வாங்காது என்பதற்கு உதாரணமே இந்த சிறப்புக்கூட்டம்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை அரசியலமைப்பின் மாண்புக்கு புறம்பாக கிடப்பில் போட்ட ஆளுநர், உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகு அவற்றை அவசர அவசரமாக திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பப்பட்ட மூன்றே நாட்களில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையை உடனே கூட்டி, அந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது ஜனநாயக பாதையில் மாபெரும் மைல்கல் '' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்