கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் பலி!

செவ்வாய், 1 நவம்பர் 2022 (20:30 IST)
புகழ்பெற்ற கொரியன் பாடகர் லீ ஜிகான் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடானா தென் கொரியாவில்,  பிரதமர் ஹன் டக் சூ தலைமையிலான ஆட்சி  நடந்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் , தலை நகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூறும் ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 154 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த  நிகழ்ச்சியில் அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லையோ என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ஹாலோவின் நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களில்,  பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட பிரபல பாடகர் லீ ஜீகான் (24)என்பவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இவர், பாப் பாடகர், நடிகர், ரியாட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு பல லட்சம் ரசிகர்களைக் கொண்டவர் ஆவார். அவரது இறப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்