வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி விபத்தில் சிக்கி பலி

புதன், 6 ஜூன் 2018 (15:06 IST)
வேலூர் அருகே பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் சென்ற காதல் ஜோடியினர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் நெமிலி அருகே உள்ள வடகண்டிகை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரத்குமாரும், அவரது கல்லூரியில் படித்து வரும் ஜெயப்பிரதா என்ற மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விஷயம் தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
 
இதனையடுத்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டிலிருந்து பைக்கில் அழைத்து கொண்டு சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அவர்கள் சென்ற பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்