5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Mahendran

திங்கள், 17 ஜூன் 2024 (08:18 IST)
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்திற்கு ஐந்து முறை மிரட்டல் வந்திருப்பதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்து வருவதும் வழக்கமாகி கொண்டு இருக்கிறது. 
 
அந்த வகையில் நேற்று இரவு திடீர் என சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் சென்னை விமான இயக்குனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததை அடுத்து நள்ளிரவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டதாகவும் இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த இரு வாரங்களில் மட்டும் ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்