7-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 65-வயது முதியவர் கைது!

J.Durai

செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:07 IST)
புதுச்சேரியின் கிராமப்பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (65). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி ராதாகிருஷ்ணன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
உடனே நடந்த சம்பவம் குறித்து சிறுமி அழுதுகொண்டே அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  சிறுமியின் பெற்றோர் இது குறித்து பாகூர் காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
 
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகூர் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்