பதற்றமான 992 வாக்குச் சாவடிகள் - துரித நடவடிக்கைகள் குறித்து விளக்கம்!

திங்கள், 1 மார்ச் 2021 (11:33 IST)
மதுரை மாவட்டத்தில் 992 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவித்து,தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 
மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் நடைபெறாத வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடியோ, ஸ்டேட்டிக், பறக்கும் படை என சட்டமன்ற தொகுதிக்கு தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு இவை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.
 
முறையான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படாது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1950 எண் மற்றும் சி விஜில் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். மேலும் வாகனங்கள் அனுமதி பெற சுரிதா என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 
 
காவல் துறை மூலம் 21 இடங்கள் பொதுக்கூட்டம், தெரு முனை பிரச்சாரம் நடைபெறும் இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் 3856 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் 992 பதற்றமானவை.80 வயதுக்கு மேல் உள்ள விருப்பமுள்ளவர்கள் தபால் ஓட்டு சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் . இணையம் மூலம் இதற்கான படிவம் பெற முடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்