சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 973 வாகனங்களை மார்ச் 26ம் தேதி ஏலம் விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் – 953, மூன்று சக்கர வாகனங்கள் - 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-09 என மொத்தம் 973 வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது