பிளாஸ்டிக் சாலையை கண்டுபிடித்தது தமிழர்.. ஆனால் உத்தரபிரதேசத்தில் தான் அதிகம்..!

Mahendran

திங்கள், 29 ஜனவரி 2024 (11:34 IST)
சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை கொண்டு சாலைகள் அமைக்கலாம் என்றும் அவ்வகையில் சாலைகள் அமைத்தால் பல ஆண்டு காலம் அந்த சாலைகள் உறுதியாக இருக்கும் என்றும் கண்டுபிடித்தது ஒரு தமிழர் என்பதும் அவர் பெயர்  வாசுதேவன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மதுரை தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியரான இவர் பிளாஸ்டிக் மூலம் சாலைகள் அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக கோவில்பட்டியில் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டது. 
 
ஆனால் அதன் பின்னர் தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலை அமைப்பதில் பெருமளவு அக்கறை காட்டவில்லை. ஆனால் நாட்டிலேயே முன்மாதிரியாக 813 கிலோ மீட்டர் தூரத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிளாஸ்டிக் சாலை அமைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார்.  
 
தற்போது 466 சாலைகளில் ஒவ்வொரு சாலையிலும் ஒன்பது கிலோமீட்டர் தூரத்துக்கு பிளாஸ்டிக்  சாலை தற்போது அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார். 
 
பிளாஸ்டிக் சாலையை கண்டுபிடித்த தமிழகத்திலும் நிறைய பிளாஸ்டிக் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்