ஐநாவிற்கும், இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதிய 6 ஆம் வகுப்பு மாணவி

வியாழன், 20 டிசம்பர் 2018 (15:31 IST)
உலகம் முழுவதும் விமானங்கள் மூலம் விதைப்பந்துகள் தூவவும், பறவைகள் வேட்டையாடுவதை தடுக்கவும் ஐநாவிற்கும், இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதிய 6 ஆம் வகுப்பு மாணவியின் புதிய முயற்சி – கரூரில் சுவாரஸ்ய நிகழ்ச்சி



உலகில் பூமி வெப்பமயமாதலை தடுக்க  கரூர் அடுத்துள்ள ராமேஸ்வரப்பட்டி பகுதியை சார்ந்த ரக்‌ஷனா, இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விமானம் மூலம் விதைகள் தூவவும், அதன் மூலம் மரங்கள் நடவும் இந்திய பிரதமர் மோடிக்கும், உலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விதைப்பந்து தூவவும், அதன் மூலம் மரங்களை அதிகரிப்பதற்காகவும், பறவைகளை வேட்டையாடுவதை தடுக்கவும் ஐநாவில் கட்டாயம் சட்டம் நிறைவேற்றிட வேண்டும் என்று ஐ.நா செயலாளர் அண்டோனியா குட்ரஸ் அவர்களுக்கும் கரூர் தபால் நிலையத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பினார்.


 
கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ரக்ஷனா  கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டும், பறவைகளை வேட்டையாடுவதை தடுக்கவும் 24 மணி நேரம் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 400 கோடி விதை பந்துகளை விமானம் மூலம் துாவ வேண்டும், பறவைகள் வேட்டையாடுதலை தடுக்க வேண்டும் என்பதனை கோரிக்கையாக வைத்து மாணவி ரக்ஷனா கரூரில் உள்ள தலைமை தபால்நிலையம் முன்பு தினந்தோறும் 5 நிமிட தியானங்கள் நடத்தி வந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் ஐ.நா., சபைக்கு கோரிக்கைகளை முன்வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு நாட்களாக தொடர்ந்து 5 நிமிட தியானத்தில் ஈடுபட்டு வந்த சிறுமி ரக்க்ஷனா  நேற்று (18-12-18) இரவு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும், ஐ.நா செயலாளர் அண்டோனியா குட்ரஸ் ஆகியோருக்கும் உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு கடிதம் எழுதினார். அந்த கடிதத்துடன், அந்த மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சிறுமி ரக்‌ஷனா இந்த புவி வெப்பமயமாதலை தடுக்க செய்த செயல்களை ஆல்பமாக கொண்டும் அனுப்பினார். அவரது இரு கோரிக்கைகளையும் அதாவது இயற்கையை பெருக்கும் பறவைகளை காக்க அதனை வேட்டையாடுவதை தடுக்கவும் உலகில் 2 ஆயிரத்து 400 கோடி விதைகளை விமானம் மூலமாக தூவினால் மரங்கள் பெருகும் இயற்கை வளம் அதிகரிக்கும் ஆகையால் சுனாமி, பூகம்பம், திடீர் புயல், பனிமழை ஆகியவைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றும் கோரிக்கைவிடுத்த அந்த சிறுமி, அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாணவி ரக்‌ஷனாவின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும், பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்