5 வது கட்ட பொது ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (19:15 IST)
தமிகத்தில் இன்று மேலும் 5546 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,92,943 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 550 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் , சில தளர்வுகளுடன்  4வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று தமிழக அரசு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொரோனா ஊடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திறப்பதாகக் கூறப்பட்ட பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

நீச்சல் குளம், பொழுதுபோக்குப் பூங்கா,கடற்கரைகளுக்குத் தடை தொடரும் , அதேபோல் புறநகர் மின்சாரப் போக்குவரத்திற்குத் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு வழிகாட்டு முறைகளின்படி, உணவகங்கள்,தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கவும், ஹோட்டல்களில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.#லாக்டவுன் #lockdown2020 #lockdownoctober31

பிற மாநிலங்களில் இருந்துசென்னை விமான நிலையங்களுக்கு வரும்  50 விமானங்கள் தரையிறங்க அனுமதி உள்ள நிலையில்  இனி 100 விமானங்கள் வரை தரையிறங்கலாம் எனவும்,  மதுரை, தூத்துக்குடி, சேலம் ,கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க ஏற்கனவே உள்ள வழிமுறைகளே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்