ஒரே நாளில் 527; மொத்தம் 3550: தமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு!

திங்கள், 4 மே 2020 (17:45 IST)
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. 
 
இன்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழியாக கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதாரத்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
527 பேரில் தமிழகத்தில் ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்