தூத்துக்குடியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பெண்கள் பலி!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:09 IST)
சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பெண் தொழிலாளர்கள் பலி!
 
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நெல்லையிலிருந்து வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற குட்டியானை எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 
 
இந்த விபத்தில் மணக்காடு, மணப்படை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 5 பெண்கள் தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்