தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்!

புதன், 2 ஜூன் 2021 (15:56 IST)
தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக தமிழக அரசிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் உட்பட பல நிறுவனங்களில் தற்போது ஆக்சிஜன் தயாரிக்கப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஓரளவு நீங்கியுள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்திலேயே ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்
 
இதனை அடுத்து தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்